இந்தியாவில் மின்னல்வேக பரவல் – கொரோனா பாதிப்பு 20,000 த்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,000 த்தை தாண்டிஇருப்பது மிகுந்த கவலையை உருவாக்கியுள்ளது. உலகளாவிய புள்ளி விபரங்களின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் 20,178 பேர்.

உலக நாடுகளில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா பரவல் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 18,601 ஆக இருந்தது. நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

Advertisements

இந்நிலையில், கொரோனா பாதிப்பு பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்து உள்ளது. என்றும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,984 ஆக உயர்வடைந்து உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும் உலகளாவிய புள்ளி விபரங்களின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் 20,178 பேர். பலியானவர்கள் 645 பேர்.

Advertisements