மேலும் 31 பேருக்கு கொரோனா, குணமடைந்தோர் எண்ணிக்கை கூடுதல்

தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார்.

10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது.

Advertisements

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 81 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத்துறை செயலர் மேலும் அளித்துள்ள குறிப்புகள்…

1) வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள் … 28,711

2) அரசுக் கண்காணிப்பில் இருப்பவர்கள் … 135

Advertisements

3) 28 நாள்கள் கண்காணிப்பு முடிந்தவர்கள் … 68,519

4) சோதனைக்கு உட்பட்டவர்கள் … 15,502

5) நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் … 1204

6) குணமடைந்து வீடு திரும்பியவர்கள் … 81

7) இறப்பு …. 12

Advertisements

Related posts