பிரபல இசையமைப்பாளரின் வளர்ப்பு நாய் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்

பிரபல இசையமைப்பாளரின் வளர்ப்பு நாய், அவர் இசையமைப்பதற்கு ஏற்ப கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி அசத்தி உள்ளது.

View this post on Instagram

#coronasong

A post shared by 𝐒𝐀𝐌 𝐂 𝐒 (@samcsmusic) on

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய – மாநில அரசுகள் முயற்சி எடுத்து வருகின்றன.

Advertisements

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். கொரோனா பாடல் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பாடலின் சிறப்பம்சம் என்னவென்றால், அப்பாடலை அவர் வளர்க்கும் நாய் பாடியுள்ளது. அவர் கிட்டார் இசையமைப்பதற்கு ஏற்ற மாதிரி நாய் ஊளையிட்டுப் பாடும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisements