கொரானா பற்றிய விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தி அசத்திய நெல்லை காவல் ஆய்வாளர்

குழந்தைகளிடையே கொரானா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க வேண்டியும் ஓவியப்போட்டி நடத்தி அசத்திய நெல்லை காவல் ஆய்வாளர்..

நெல்லை மாவட்டம் பனகுடி காவல் நிலையத்தில் பணிபுரிபவர் சாகுல் ஹமீது. இவர் கொராணா பரவலை தடுக்கும் விதமாக போடப்பட்ட 144 தடை உத்தரவு வந்ததில் இருந்து அவரது காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடு ஓரங்களில் தங்கும் ஆதரவற்றவர்களுக்கு தினசரி உணவுகளை வழங்கி வருகிறார்.

Advertisements

அதுமட்டுமில்லாமல் எந்த வித ஆதரவும் இல்லாமல் குடிசைகளில் வாழும் ஏழைகளுக்ககு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அவரது இல்லங்களுக்கு சென்று வழங்கி வருகிறார். இந்த நிலையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கொரானா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களுக்கு வீட்டில் அடைந்து இருக்கிறோம் என்ற எண்ணத்தை மறக்க செய்ய வேண்டும் என்று எண்ணிய அவர் தனது காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பணகுடி, காவல்கிணறு, வடக்கன்குளம், ரோஸ்மியாபுரம் தெற்கு வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி ஒன்றை அறிவித்தார்.

அறிவித்த இந்த ஓவியப் போட்டியில் பத்து வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர், சிறுமியர் சுமார் 300க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளிலிருந்து ஓவியங்களை சார்ட் பேப்பரிலும், நோட்டுகளிலும் வரைந்தனர். பின்பு அந்த ஓவியங்கள் அனைத்தையும் சேகரித்த காவல்துறையினர் பணகுடி திரு இருதய பள்ளியில் வைத்து அதற்கான மதிப்பீடு செய்யும் பணியை ஓவிய ஆசிரியர்கள் நான்கு பேரை வைத்து மதிப்பீடு செய்தனர்.

பின்பு அதிலிருந்து பதி மூன்று ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் முதல் மூன்றுக்கு பரிசுகளுக்கும் மற்ற 10 சிறுவர் சிறுமியர்களுக்கு ஆறுதல் பரிசுக்கு தேர்ந்தேடுத்தனார். காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது மற்றும் காவலர்கள் பரிசு பெற்ற குழந்தைகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பரிசுகளை வழங்கினர். முதல் பரிசாக வடக்கன்குளத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் லாவித்திரனுக்கும், இரண்டாம் பரிசாக காவல்கிணற்றை சேர்ந்த 9 வயது சிறுவன் லிங்க சபினேஷ்க்கும், மூன்றாம் பரிசாக பணகுடியை சேர்ந்த 9வயது சிறுமி சங்கரிக்கும் வழங்கப்பட்டது.

அதில் முதல் பரிசாக சிறுவர் சைக்கிள் பெற்ற நான்கு வயது சிறுவன் லாவித்திரன் ஆய்வாளரிடம் மழலை மாறாமல் உரையாடிய விதம் அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. இந்த 144 தடை உத்தரவு சமயத்தில் குழந்தைகளுக்கு இதுபோன்ற போட்டி நடத்தியது இந்த பகுதி குழந்தைகளை பெரிதும் மகிழ்ச்சி அடைய செய்தது.

Advertisements
Advertisements