‘0’ ஆகிவிடும் என்றார் முதல்வர். முன்னாடி 10 சேர்ந்து 100 ஆகிவிட்டதே! – கஸ்தூரி வேதனை

அடுத்த 3 நாட்களில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எதுவுமே இருக்காது என்று முதல்வர் எடப்பாடியார் அறிவித்து மூன்றாம் நாளான நேற்று, அவரது எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது.

ஒரு வாரத்துக்கு பின்னர் மீண்டும் 100க்கு அதிகமான கொரோனா பாதிப்பை நேற்று ஒரே நாளில் சந்தித்தது தமிழ்நாடு. தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு நேற்று கொரோனா நோய் தொற்று உறுதியானது. நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.

Advertisements

இதுகுறித்து ட்வீட்டியுள்ள நடிகை கஸ்தூரி, தமிழ்நாடு தீவிர சோதனைக்காலத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது :


“மூன்று நாளில் புதிய தொற்று ‘ஜீரோ’ ஆகிவிடும் என்றார் முதல்வர். 0 வந்துவிட்டது. ஆனால் முன்னாடி ஒரு 10 ம் சேர்ந்து 100 ஆகிவிட்டதே Unamused face 105 new cases today in TN, 50 in chennai total tally 1477. Testing times ahead for Tamil Nadu.” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisements