சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு சைக்கிளில் பயணம்

சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு சைக்கிளில் பயணம்

சென்னையில் இருந்து சைக்கிளில் ஜெர்மனி நகரான ஹேம்பர்க்கிற்கு 36 வயதான பொறியாளர் நரேஷ்குமார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Advertisements


உறவினர்களும் நண்பர்களும் அவரை வழியனுப்பி வைத்தனர்.குழந்தைகள் துன்புறுத்தல், கொத்தடிமைகளாக பணிபுரிதல் போன்றவற்றுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதிதிரட்டவும் அவர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.


மும்பையில் இருந்து ஓமனுக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து சைக்கிளில் பயணத்தைத் தொடர நரேஷ்குமார் திட்டமிட்டுள்ளார்.

சுமார் 8 ஆயிரத்து 500  கிலோ மீட்டர் தூரத்தை ஈரான் உள்ளிட்ட 12 நாடுகளைக் கடந்து செல்லவுள்ளார். தினமும் 120 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய இருப்பதாக நரேஷ்குமார் தெரிவித்தார்.

Advertisements