சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு MGR பெயர் -பிரதமர் மோடி

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று சென்னை கிளாம்பாக்கத்தில் கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படுகிறது என்றும் தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியாகும் என்றும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு 14,000 வீடுகள் கட்டிக் கொடுக்க உள்ளது மத்திய அரசு என்றும் கூறினார்.

Advertisements

சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெறும் அதிமுக கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், என்.ஆர் காங். தலைவர் ரங்கசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, ஏசி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Advertisements

Related posts