பாஜக மூத்த தலைவர் L.K அத்வானிக்கு இடமில்லை

உ.பி., பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் வெளியீடு, பா.ஜ.க., மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு இடமில்லை

பாஜக அறிவித்துள்ள அக்கட்சியின் மக்களவைத் தேர்தலுக்கான நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலில் அக்கட்சியின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானியின் பெயர் இடம்பெறாதது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

உத்தரபிரதேச மாநிலத்துக்கான 40 பேர் அடங்கிய தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜேட்லி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள நிலையில் மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

இவ்விருவரும், அக்கட்சி அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Advertisements

Related posts