இயக்குனரிடம் அடாவடி செய்யும், பிக்பாஸ் ஐஸ்வர்யா

நடிக்க சொன்னால் இயக்குனரிடம் அடாவடி செய்யும், பிக்பாஸ் ஐஸ்வர்யா…

நடிகர் ஆரி, நடிகை ஐஸ்வர்யா நடிப்பில், அய்யனார் திரைப்பட இயக்குனர், “அலேகா” என பெயரிடப்பட்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Advertisements

90% படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட படபிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. ஆனால் பிக்பாஸ் ஐஸ்வர்யா படபிடிப்புக்கு இஷ்டத்துக்கு வருவதும், இயக்குனர் சொல்வதை நடிக்காமலும் இஷ்டத்துக்கு நடிப்பதும் என சேட்டைகள் செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் மேடவாக்கத்தில் நடைபெற்ற படபிடிப்பில், ஐஸ்வர்யா வழக்கம் போல் செய்து வந்துள்ளார்.

படத்தின் முக்கிய காட்சியில் தான் சொல்வதை செய்யாத நடிகைக்கும், இயக்குனருக்கும், சண்டை வந்துள்ளது.. மேலும் நடிக்க தெரியவில்லை என இயக்குனர் சுட்டி காட்டியதற்கு ஐஸ்வர்யா அடாவடி செய்துள்ளார்.

தயாரிப்பாளரும் புதுசு என்பதால் என்ன செய்வது என்று அறியாமல் உள்ளாராம். மேலும் படகுழுவினர், ஒரு படம் கூட ஒழுங்க வெளிவராத நிலையில் இப்படி செய்கிறாரே என, ஐஸ்வர்யாவை பற்றி புலம்பி தள்ளுகின்றனராம்…

Advertisements
Advertisements