நாளைமுதல் பேக்கரிகள் இயங்கலாம் – சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 6 மணி முதல் 1 மணி வரை பேக்கரிகள் இயங்கலாம் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , ஏழை, எளியவர்களுக்காக அம்மா உணவகங்களில் இரவில் கலவை உணவுகள் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

Advertisements

“அத்யாவசிய பொருட்களை வாங்க மக்கள் தினமும் வெளியே வருவதை தடுக்க சென்னையிலும் வாகனங்களுக்கு வண்ண பாஸ்கள் வழங்கப்பட உள்ளன.

செய்தித் தாள்களை பத்திரிகை நிறுவனங்கள் பிரிண்ட் செய்யும் போதே கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மற்ற துறைகளுக்கு ஒரு முன்மாதிரியாக பத்திரிக்கை நிறுவனங்கள் செய்கின்றன. அந்த நாளிதழ்களை விநியோகிக்கும் நபர்களும் முகக்கவசம், கிளவுஸ் அணிந்து அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 6 மணி முதல் 1 மணி வரை பேக்கரிகள் இயங்கலாம்” என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Advertisements