மூக பணிகளுக்காக ரூ 52,750 கோடி நன்கொடை – Wipro- அசீம் பிரேம்ஜி

சமூக பணிகளுக்காக ரூ 52,750 கோடி நன்கொடை – Wipro- அசீம் பிரேம்ஜி அறிவிப்பு

கல்வி மற்றும் சமூகப் பணிகளுக்காக மேலும் 52 ஆயிரம் 750 கோடி ரூபாய் வழங்குவதாக விப்ரோ குழுமத்தின் தலைவர் அசீம் பிரேம்ஜி அறிவித்துள்ளார்.

Advertisements


அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் ஆகியவற்றுக்கு பெருமளவு பணத்தை வழங்கியுள்ளார். இதுதவிர 150 தன்னார்வ நிறுவனங்களுக்கும் ஆண்டுதோறும் நன்கொடையை அள்ளிக் கொடுத்து வருகிறார்.


இதனுடன் சேர்த்து விப்ரோ குழுமம் அளித்துள்ள நன்கொடைத் தொகை ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பில் அண்டு மெலின்டா கேட்ஸ் என்ற அமைப்பு 40 பில்லியன் டாலரும், ஃபோர்டு பவுண்டேசன் 12 பில்லியன் டாலரும் நன்கொடையாக அளித்துள்ளன.


இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்கள் சமூக நற்பணிகளுக்காக அதிக அளவில் காணிக்கைகள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டை தவிடுபொடியாக்கும் வகையில் அசீம் பிரேம்ஜியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisements