கொரோனா வைரஸ் பற்றி “Wuhan Diary” என எழுதியவருக்கு கொலை மிரட்டல்.!

சீனாவின் உகான் மாகாணத்தில் இருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி வருகிறது. உகான் நகரில் மட்டும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், மூன்று மாதங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு. தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

சீனாவின் சிறந்த எழுத்தாளர் உகான் நகரை சேர்ந்த பாங் பெகன். இந்த நகரில் பரவிய கொரோனா வைரஸ் துயரத்தை பற்றிய உகான் டைரி என ஆன்லைனில் எழுதியுள்ளார். அவர் எழுதிய அந்த டைரி பல லட்சம் பேரை கவர்ந்துள்ளது. இந்த டைரி பல மொழிகளில் வெளியிடப்பட உள்ளன.

Advertisements

இதனை கட்டுப்படுத்துவதை பற்றி சொல்லும் நாடுகளுக்கு ஊக்கம் கொடுப்பதாக இருக்கிறது என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் உகான் நகரில் டிசம்பர் மாதம் ஆரம்பித்தது, ஜனவரி மாதம் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. 1.10 கோடி மக்கள் உள்ள உகான் நகரில் மக்களின் ஊரடங்கு வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸை எதிர்த்து பலரும் தீவிரமாக பணியாற்றிய வரும் நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் அச்சம், கோபம் மற்றும் நம்பிக்கை குறித்து எழுதியுள்ளார்.

மேலும் நோயாளிகள் பற்றியும் , கருவிகள் தட்டுப்பாடு போன்றவற்றறையும் எழுதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் உயிருக்கு மிரட்டல் வந்துள்ளது.

Advertisements