அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி சவாலை ஏற்ற இயக்குனர் ராஜமெளலி

அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி தனது வீட்டு வேலைகளை செய்து ஒரு புதிய சேலஞ்சை துவங்கியுள்ளார். அதை ஏற்றுக்கொள்வதாக இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

மே 3 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் சாமானியர் தொடங்கி சினிமா நட்சத்திரங்கள் வரை அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தான் இருக்கின்றனர்கள்.

Advertisements

உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது, சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது என தாங்கள் செய்யும் பல விஷயங்களை செய்யும் சினிமா நட்சத்திரங்கள் அதை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.வீட்டில் நேரத்தை போக்க என்ன செய்வது என தெரியாமல் விழித்துகொண்டிக்கும் நபர்களுக்காகவே சமூக வலைத்தளங்களில் வித்யாசமாக சில சேலஞ்சுகள் உலா வருகின்றன.

தற்போது அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா #BetheREALMAN என்ற சேலஞ்சை ஆரம்பித்துள்ளார். எப்போதும் பெண்களே வீட்டு வேலைகள் செய்து வரும் நிலையில், ஆண்கள் வீட்டு வேலைகளை செய்து அதன் வீடீயோவை பகிரவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

“ஆண் வீட்டு வேலையை சிறப்பாக செய்பவராக இருக்க முடியும், மற்றும் ஒரு உண்மையான ஆண் தன் பெண் துணையை தனியாக அனைத்து வேலைகளையும் செய்துகொள்ள விடமாட்டார். குறிப்பாக பணியாளர் யாரும் வரமுடியாத இவ் நேரத்தில். அதனால் வீட்டு வேலைகள் செய்வதில் உதவி செய்யுங்கள்.

#BetheREALMAN ராஜமௌலி சார் இதை மற்றவர்களுக்கு பரப்பும் விதமாக ஒரு வீடியோ வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என சந்தீப் ரெட்டி ட்விட்செய்துள்ளார்.இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டுள்ள இயக்குனர் ராஜமௌலி தனது வீடியோவை நாளை வெளியிடுகிறேன் என கூறியுள்ளார்.

Advertisements
Advertisements

Related posts