ஏப்ரல் – மே மாத தேர்வுகள் ஒத்திவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. மேலும் அரசு தேர்வுகள், பள்ளி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்திலும் இந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசிடம் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வைத்து வருகிறது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட அதிகம் வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisements

இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், ஊரடங்கு இன்னும் நீட்டிக்க வாய்ப்புள்ளதால் ஏப்ரல் மாத இறுதி மற்றும் மே மாதம் நடைபெற இருந்த அனைத்து பொறியியல் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிய தேர்வு அட்டவணை ஊரடங்கு முழுவதுமாக முடிந்த பிறகு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisements