விலங்கின் இரத்தத்தில் கொரோனாவுக்கான ஆன்டிபாடிகள்: பெல்ஜியம் அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பு

பெல்ஜியம் அறிவியலாளர்கள் விலங்கு ஒன்றின் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபயோடிகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

லாமாக்கள் எனப்படும் ஒட்டக வகையைச் சேர்ந்த விலங்குகளின் உடலில் கொரோனா வைரஸுக்கான ஆன்டிபயோடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வாய்ப்புகள் நெருங்கி வருவதாக கருதப்படுகிறது.

Advertisements

பெல்ஜியத்தின் Ghent நகரிலுள்ள உயிரித் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் அறிவியலாளர்கள், லாமாக்களின் இரத்தத்தில் உள்ள மூலக்கூறுகள் கொரோனாவுக்கெதிரான சிகிச்சையில் பயன்படலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.

என்றாலும், அவற்றை கொரோனா மருந்தாக பயன்படுத்துவதற்கு மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

லாமாக்களின் இரத்தத்தில் உள்ள இந்த ஆன்டிபயோடிகள், முதலில் HIV சிகிச்சைக்கான ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டன.

அத்துடன், Middle East Respiratory Syndrome (MERS) மற்றும் Severe Acute Respiratory Syndrome (SARS) ஆகிய நோய்களின் சிகிச்சையில் இந்த ஆன்டிபாடிகள் பலன் தரக்கூடியவை என ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Advertisements

Related posts