தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா, சென்னையில் 400 ஐ தொட்டது

தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா.

தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்வு.

Advertisements

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1629 ஆக இருந்தது.

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 54 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஐ தொட்டது

Advertisements

கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 90 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தமாக 752 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Advertisements