குப்பை அள்ளச் சென்ற துப்புரவுப் பணியாளர் மீது சரமாரி தாக்குதல்

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக சுகாதாரப் பணிகள் பட்டி தொட்டி முதல் பட்டணங்கள் வரை மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி அவர்களும் துப்புரவுப் பணியாளர்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் அயராது செய்து வரும் பணிக்கு தலை வணங்குவதாக கூறினார்.

கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் குப்பை அள்ளச்சென்ற ஒரு பெண்ணை அச்சுறுத்தியதுடன், மஞ்சுநாத் என்கிற துப்புரவு கண்காணிப்பாளரும் கடுமையாக தாக்கப்பட்டதில் அவர் படு காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisements

சுகாதாரம் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் ஒரு ஒலிபெருக்கியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தகவல்களை வாசித்துக் கொண்டிருந்தனர் என்றும் இது பிடிக்காத அப்பகுதி வாலிபர்கள் தகாத வார்த்தைகள் பேசிக் கொண்டே தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பசவனஹள்ளி காவல் நிலையத்தில் கும்பல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisements