ஏர் இந்தியாவின் விமான டிக்கெட் முன்பதிவு ஏப்.30 வரை நிறுத்தம்

ஏர் இந்தியாவின் விமான டிக்கெட் முன்பதிவு ஏப்.30 வரை நிறுத்தம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான போக்குவரத்திற்கான டிக்கெட் முன்பதிவு மாத இறுதி வரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisements

கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், விமானப் போக்குவரத்தும் ஏப்ரல் 14ந் தேதி நள்ளிரவு வரை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு 30ந் தேதி வரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுடன் முடியுமா அல்லது நீட்டிக்கப்படுமா, என்ற அரசின் அறிவிப்பிற்காக காத்திருப்பதாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Advertisements