ஓய்வின்றி உழைத்து வெற்றி பெறுவோம் – ஓ பன்னீர் செல்வம்

ஓய்வின்றி உழைத்து 40 தொகுதிகளிலும் 21 தொகுதி இடைத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம் என்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி கட்சிகள் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இவ்வாறு உரை நிகழ்த்தினார். அப்போது ஜெயலலிதா மறைந்த போது மத்திய அரசு நமக்கு தோள் கொடுத்து துணையாக இருந்தது என்று ஓபிஎஸ் பெருமிதம் கொண்டார்.

Advertisements

சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெறும் அதிமுக கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், என்.ஆர் காங். தலைவர் ரங்கசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, ஏசி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Advertisements

Related posts