ஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிருத்விராஜ், மனைவி உருக்கமான பதிவு

கொரோனா ஊரடங்கு உத்தரவால், ஜோர்டானில் சிக்கித் தவிக்கிறார் நடிகர் பிருத்விராஜ். கணவன் இல்லாததால், இந்த ஆண்டு விஷு பண்டிகை களையிழந்து போய்விட்டதாக அவரது மனைவி உருக்கமான பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மலையாள நடிகரான பிருத்விராஜ் தமிழில் கனா கண்டேன், மொழி, காவியத் தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

Advertisements

இந்நிலையில், பிருத்விராஜின் அடுத்த படமான ஆடுஜீவிதம் படத்தின் ஷூட்டிங்கை நடத்த ஜோர்டான் சென்ற படக்குழுவினர் கொரோனா லாக்டவுனால், நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

பிருத்விராஜ் உடன் படக்குழுவை சேர்ந்த 53 பேர் இந்தியா திரும்ப பல முயற்சிகளை மேற்கொண்டும் எதுவும் இதுவரை பலனளிக்கவில்லை. இது பற்றி பிருத்விராஜூம் சமூக வலைத்தளத்தில் கஷ்படுவதை வெளியிட்டுருந்தார்.

தற்போது, பிருத்விராஜூன் மனைவி உருக்கத்துடன் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளிட்டார். அதில், தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருவது போல, இதே நாளில் மலையாளிகள் விஷு பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், கடந்த ஆண்டு விஷு பண்டிகைக்கு உடன் இருந்து விஷு விருந்து உண்ட கணவன், தற்போது நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார் என, வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Advertisements

இந்த பதிவை கண்ட ரசிகர்கள் கவலைகொள்ள வேண்டாம், நலமுடன் பிருத்விராஜ் வீடு திரும்புவார். தைரியத்துடன் இருங்கள் என ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisements

Related posts