ஜப்பானில் 9.3 நிலநடுக்கம், சுனாமியால் 90 அடி வரை கடல் அலை உயரும் அபாயம் ஆய்வில் பரபரப்பு தகவல்

ஜப்பான் நாட்டு அரசின் ஆய்வுக் குழு ஒன்று வெளியிட்டு இருக்கும் செய்தியில், ஜப்பானில் விரைவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். டைம்ஸ் பத்திரிகை இதை செய்தியாக வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், ”ஜப்பானின் வடக்குப் பகுதியில் சுனாமி ஏற்படுவது உறுதி.

Advertisements

9 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்தில், 30 மீட்டர் உயரத்திற்கு சுனாமி ஏற்படும். பசுபிக் கடற்கரையை ஒட்டி இந்த பாதிப்பு உணரப்படும்.

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி டோக்கியோவுக்கு தென் பகுதியில், பசுபிக் கடலில் இருக்கும் அகாஸ்வாரா தீவுக்கு தெற்கே பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பெரிய அளவில் எங்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

நிலநடுக்கம் ஜப்பான் டிரஞ்ச் பகுதியில் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில்தான் வடக்கு அமெரிக்கா, பசிபிக், யுரேசியன், பிலிப்பைன்ஸ் கண்டங்கள் ஒரே இடத்தில் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. யுரேசியன் கண்டத்தின் மீது தெற்கு ஜப்பான் உள்ளது. இதனால், ஜப்பான் எப்போதும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுகிறது.

A wave approaches Miyako City from the Heigawa estuary in Iwate Prefecture after the magnitude 8.9 earthquake struck the area March 11, 2011. Picture taken March 11, 2011. REUTERS/Mainichi Shimbun(JAPAN – Tags: DISASTER ENVIRONMENT IMAGES OF THE DAY) FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. JAPAN OUT. NO COMMERCIAL OR EDITORIAL SALES IN JAPAN – RTR2JTXO

ஜப்பான் டிரஞ்ச் பகுதிதான் எப்போதும், நிலநடுக்கத்தின் மையமாக இருக்கிறது. 2011 மார்ச் 11ல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த ஆண்டில் ஏற்பட்ட சுனாமிக்கு மட்டும் 15,000 பேர் உயிரிழந்தனர்.

Advertisements

இந்தக் குழுவின் ஆய்வின்படி, ஷிஷிமா டிரஞ்ச் பகுதியில் 9.3 ரிக்டர் அளவில் சுனாமி ஏற்படலாம். அப்போது கடல் அலை 90 அடி உயரத்திற்கு உயரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவில் நிலநடுக்கம் வரும்போது, மக்களை வெளியேற்றுவது மிகவும் கடினம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கணித்தது போல் நிலநடுக்கம் ஏற்பட்டால், புகுஷிமா ஒன்றாம் எண் அணு உலை முழுக்க மூழ்கிவிடும் என்று குறிப்பிட்டுள்ளனர். 2011ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போதும், இந்த உலை மிகவும் பாதிக்கப்பட்டது.

Advertisements