ஆந்திர மக்களுக்கு தலா 3 இலவச முக கவசங்கள் – ஜெகன் உத்தரவு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கிற வகையில், ஆந்திர மக்களுக்கு தலா 3 இலவச முக கவசங்கள் வழங்க முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, விஜயவாடா ததேபள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று உயர் மட்டக்குழு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

Advertisements

இதில் அரசு தலைமைச்செயலாளர் நிலம் சாவ்னி, போலீஸ் டி.ஜி.பி. கவுதம் சவாங், சுகாதாரத்துறை சிறப்பு தலைமைச்செயலாளர் ஜவகர் ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கிற வகையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 5.3 கோடி மக்களுக்கும், தலா 3 முக கவசங்கள் வீதம் மொத்தம் 16 கோடி முக கவசங்கள் வழங்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.

Advertisements

Related posts