25 கோடி 2 ஜி மொபைல் இணைப்புக்கள் துண்டிப்பு

25 கோடி 2 ஜி மொபைல் இணைப்புக்கள் துண்டிப்பு : தொலைதொடர்பு நிறுவனங்கள் அறிவிப்பு

இந்தியா முழுவதும் உள்ள 25 கோடி 2 ஜி இணைப்புக்கள் விரைவில் துண்டிக்கப்பட உள்ளதாக தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Advertisements

நாடெங்கும் சுமார் 25 கோடி 2 ஜி மொபைல் இணைப்புக்கள் உள்ளன. அவற்றில் 10 கோடி இணைப்புக்கள் ஏர்டெல் நிறுவனத்திலும் 15 கோடி இணைப்புக்கள் ஐடியா மற்றும் வோட போன் நிறுவனங்களிலும் உள்ளன.

தற்போது ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்துள்ளது தெரிந்ததே.
இந்த 2 ஜி இணைப்புக்களை வைத்திருப்போர் இவைகளுக்கு ரீ சார்ஜ் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே இந்த இணைப்புக்களால் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு எந்த வருமானமும் இல்லாமல் உள்ளன. அதை ஒட்டி மாதம்தோறும் குறைந்த பட்சம் ரூ.35க்கு ரிசார்ஜ் செய்ய வேண்டும் என தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிவித்தன. அதற்கு வாடிக்கையாளர்கள் யாரும் வரவேற்பளிக்கவில்லை.

அதை ஒட்டி இந்த இணைப்புகளை துண்டிக்க முடிவு செய்துள்ளதாக இந்நிறுவனங்கள் கூட்டாக அறிவித்த்ள்ளன. அதன்படி அவுட் கோயிங் சேவைக்காக ரூ.35 ரிசார்ஜ் செய்யாத இணைப்புக்கள் இன்னும் 30 நாட்களில் துண்டிக்கப்படுவதாகவும், 45 நாட்களில் இன்கமிங் நிறுத்தப்பட்டு முழுமையாக துண்டிக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

Advertisements