ஊரடங்கில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 1.11 கோடி அபராதம்

திண்டுக்கல்லில் ஊரடங்கு மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து ரூ.1.11 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10 முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

Advertisements

பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு அறிவுறுத்தியிருந்தது.

தேவையின்றி சுற்றுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்தனர்.

மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

11 சோதனை சாவடிகள், 37 இடங்களில் வாகன தணிக்கைகள் நடந்தன.

Advertisements

மே 10 முதல் நேற்று முன்தினம் வரை 5000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றாத 56 ஆயிரத்து 400 பேருக்கு அபராதம் விதித்து ரூ.1 கோடியே 11 லட்சத்து 46 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

Advertisements

Related posts