இன்று 07-04-2020 பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

இன்று பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மது கிடைக்காததால் லாரி ஓட்டுநர் கருப்பையா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஊரடங்கால் மது கிடைக்கததால் சாலையோர மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. குடும்பத்தை பிரிந்து 10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்த ஓட்டுநர் கருப்பையா மதுவுக்கு அடிமையானவர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. மாச்சம்பாளையம், சுந்தராபுரம், காந்திபுரம், உக்கடம், ஈச்சனாரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ஈரோடு-கோபிசெட்டிபாளையம் அருகே நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது. கனமழை காரணமாக முழு கொள்ளளவான 42 அடியை அணை எட்டியதை தொடர்ந்து 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டது. அணை நிரம்பியதால் கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், கள்ளியங்காடு உள்பட 10 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டையில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை, லாரி உரிமையாளர்கள் குத்தகைக்கு எடுத்துள்ளனர். ஊரடங்கு காரணமாக, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 10க்கும் மேற்பட்ட லாரிகளிலிருந்து, திருடர்கள் பேட்டரிகளை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து, லாரி உரிமையாளர்கள் அளித்த புகாரின்படி, ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements


கோவையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க 16 இடங்களில் கிருமி நாசினி சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது. சுந்தராபுரம் உழவர் சந்தை பகுதியில் கிருமி நாசினி சுரங்கப்பாதையை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.

ஈரோடு கொரோனா தடுப்பு பணியில் அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக பவானி அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 16-ம் தேதி மீட்கப்பட்ட 6 பேரும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், மேலும் சுற்றுலா விசா மூலம் வந்தவர்கள், விதியை மீறி மதப்பிரச்சாரம் செய்ததாகக் புகார் எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 1000 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டகண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனையில் ஈடுப்பட்டு இருக்கும் போது பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1000 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் 144 தடையை மீறி வாகன ஓட்டிகள் சுற்றியதால் 2000 வாகனங்கள் பறிமுதல் 1600 பேர் மீது வழக்குப்பதிவு போலீசார் அதிரடி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு பகுதியில் 31 பழங்குடி இன குடும்பம் உள்ளது, 144,ஊரடங்கு உத்தரவால் இவர்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் கிடைக்கவில்லை, வெறும் தண்ணீரை மட்டும் குடித்து வாழ்ந்து வருகின்றனர், இதே நிலை நீடித்தால் நாங்கள் அனைவரும் பசியின் கொடுமையால் இறக்க நேரிடும் என்கின்றனர்

தென்காசி மாவட்டத்தில் மாங்காய் விளைச்சல் அமோகம் கொரோனா வைரஸ் தொற்றால் ஊடரங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்த மாங்காய்களை விற்பனை செய்ய முடியாமால் விவசாயிகள் வேதனை. மரத்திலேயே பழுத்து அழுகும் நிலை அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இராஜா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இயங்கும் தற்காலிக காய்கறி மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் நடைபாதையை ஆய்வு செய்தார்.

Advertisements