ராமர் கோவில் கட்ட கோரி அயோத்தி நகரில் 2 லட்சம் பேர் குவிகின்றனர்

ராமர் கோவில் கட்ட கோரி 2 லட்சம் பேர் குவிகின்றனர்

அயோத்தி நகரில் பதட்டம்

Advertisements

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்து அமைப்புக்களைச் சேர்ந்த 2 லட்சம் பேர் நாளை உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கூட உள்ளனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இவற்றை விரைந்து விசாரித்து முடிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி இந்து அமைப்புக்களைச் சேர்ந்த தொண்டர்கள் ஒன்று கூடி அயோத்தி நோக்கி பேரணி செல்ல உள்ளனர்.

நாளை  2 லட்சம் பேர் அயோத்தி நகரை சென்றடைவார்கள் என்பதால் அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அணிதிரளும் இந்து அமைப்பினரை அயோத்தி நகருக்கு வெளியே தடுத்து நிறுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதட்டத்தை தணிக்க போலீசார் அயோத்தி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisements