திருவாரூர் அருகே தென்னந்தோப்பு அழிந்த அதிர்ச்சியில் மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு

திருவாரூர் அருகே தென்னந்தோப்பு அழிந்த அதிர்ச்சியில் மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு

திருவாரூர்: புயலால் தென்னந்தோப்பு அழிந்த அதிர்ச்சியில் திருவாரூர் அருகே மீண்டும் ஒரு விவசாயி உயிரிழந்தார். திருத்துறைப்பூண்டி குரும்பல் கிராமத்தை சேர்ந்த வீரரவிக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் புயலில் சிக்கி முறிந்து விழுந்தன.

Advertisements

இதனால் மனமுடைந்து காணப்பட்ட வீரரவி தனது குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் புலம்பி உள்ளார். இதையடுத்து வேதனையில் இருந்த வீரரவி அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

புயலில் சிக்கி தென்னை மரங்கள் அழிந்ததால் ஏற்கனவே இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு விவசாயி மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழப்புகள் தடுக்கும் வகையில் தென்னை விவசாயிகளுக்கு அரசு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிகை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisements