தமிழக சிறை கைதிகளுக்கு புதிய இன்சூரன்ஸ் திட்டம்

தமிழக சிறை கைதிகளுக்கு புதிய இன்சூரன்ஸ் திட்டம்

தமிழக சிறைகளில் உள்ள அனைத்து கைதிகளும் இன்னும் 20 நாளில் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த சிறைத் துறை நடவடிக்கை எடுத்தது.

Advertisements

அதன்படி இன்னும் 20 நாளில் தமிழக சிறைகளில் உள்ள அனைத்து கைதிகளும் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

13 மத்திய சிறைச்சாலைகளில் உள்ள 3,600 தண்டனை கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் 13 ஆண்டுக்கு குறைவாக தண்டனை பெற்ற கைதிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். மத்திய அரசால் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி சுரக்‌ஷா பிமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா ஆகிய 2 இன்சூரன்ஸ் திட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து சிறைத்துறை கூடுதல் இயக்குனர் அசுதோஸ் சுக்லா கூறியதாவது:-–

ஜெயில் கைதிகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் 2 இன்சூரன்ஸ் திட்டத்தில் குறைந்தபட்ச தொகையில் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. புழல் மத்திய சிறையில் உள்ள 450 கைதிகள், வேலூர் சிறையில் உள்ள 260 கைதிகள், பாளையங்கோட்டை சிறையில் உள்ள 168 கைதிகள் மற்றும் புழல், திருச்சி சிறையில் உள்ள 32 பெண் கைதிகள் சேர்க்கப்படுகிறார்கள்.

Advertisements

இப்பணிகளை 2 வாரத்துக்கு முன்பு தொடங்கினோம். தற்போது வரை 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. தகுதி வாய்ந்த அனைத்து கைதிகளும் இன்சூரன்ஸ் திட்டத்தில் இன்னும் 2 வார காலத்தில் சேர்க்கப்படுவார்கள். மேலும் இன்சூரன்ஸ் திட்டத்தை சிறைத்துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

கைதிகளுக்கு வழங்கப்படும் இன்சூரன்ஸ் திட்டத்தில் மரணம், விபத்து மற்றும் உறுப்புகள் இழப்பு ஆகியவைகளுக்கு இழப்பீடு வழங்கவும் வழிவகை உள்ளது. அதன்படி விபத்து காப்பீடு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.330 செலுத்த வேண்டும்.

கைதி விபத்தில் இறந்தால் அவரது வாரிசுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். சிறையில் கைதிகள் செய்யும் வேலைகளுக்கு சம்பளமாக வழங்கப்படும் தொகை அவர்களது கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. அந்த தொகையை வைத்து இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டப்படுகிறது.

Advertisements