சென்னை – பெங்களூருக்கு 100 நிமிடங்களில் பயணம் : புல்லட் ரயிலுக்கு ப்ளான் ரெடி!

சென்னை – மைசூர் பயணத்திற்கு புல்லட் ரயில் சேவை துவக்கலாம் என மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கான ஆய்வறிக்கையை ஜெர்மனி அரசு தயாரித்துள்ளது. ரயில்வே துறையிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ”435 கிலோ மீட்டர் தூரத்தில் அமையவுள்ளது.

சென்னை – மைசூர் புல்லட் ரயில் சேவை பெரும்பாலும் தூண்களின் உதவியோடு உயரத்தில் அமைக்கப்படுமெனவும், இடையில் 11 இடங்களில் குகைகளின் வழியே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

மேலும் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த புல்லட் ரயிலில் சென்னையிலிருந்து பெங்களூரை 100 நிமிடங்களில் சென்றடையலாம் எனவும் கூறப்படுகிறது.

நாட்டில் உள்ள பழைய ரயில் தடங்கள் அனைத்தையும் அதிநவீன ரயில் பாதைகளாக மாற்றவேண்டுமெனவும், இதற்காக குறைந்த அளவு நிலத்தை கையகப்படுத்தினால் போதுமெனவும் தெரிவிக்கப்படுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு 1 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements