கேரள அரசு பேருந்துகளை சிறைபிடித்ததாக 24 பேர் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கேரள அரசு பேருந்துகளை சிறைபிடித்ததாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கேரள அரசு பேருந்துகளை சிறைபிடித்ததாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை கேரள போலீஸ் அதிகாரிகள் அவமதித்ததாக, கடந்த 21ஆம் தேதியன்று பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

Advertisements

அப்போது, திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்பட்ட கேரள அரசின் மூன்று பேருந்துகளை அவர்கள் சிறைபிடித்தனர். இது தொடர்பாக 4 பெண்கள் உட்பட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் 24 பேர் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisements