இன்றைய (02-08-2019) ராசி பலன்கள்

மேஷம்

பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உள்ள மனக்கசப்புகள் மனம் விட்டு பேசுவதன் மூலம் நீங்கும். துணிச்சலுடன் புதிய செயல்களில் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். அனுபவ அறிவு மேம்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.

Advertisements

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : ஆதரவான நாள்.

Advertisements

பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.

கிருத்திகை : இலாபகரமான நாள்.

ரிஷபம்

தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்காலம் சம்பந்தமான காரியங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் பணவரத்து அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுட்பமான முறைகளை கையாளுவீர்கள். உடல் ஆரேக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : ஒற்றுமை மேலோங்கும்.

ரோகிணி : தனவரவு அதிகரிக்கும்.

மிருகசீரிடம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

மிதுனம்

சக ஊழியர்களிடம் நற்பேறுகள் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி செல்வாக்கும், மதிப்பும் உயரும். மனக்கவலைகள் தீரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூமிவிருத்தி உண்டாகும். பிரபலமானவர்களின் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : நற்பேறுகள் கிடைக்கும்.

திருவாதிரை : மதிப்புகள் உயரும்.

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

கடகம்

உத்தியோகஸ்தரர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை வெல்வீர்கள். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். குடும்ப நபர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீகள். எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நடைபெறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

பூசம் : பரிசுகள் கிடைக்கும்.

ஆயில்யம் : விருப்பங்கள் நிறைவேறும்.

சிம்மம்

மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த சில முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூரம் : பாராட்டப்படுவீர்கள்.

உத்திரம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

கன்னி

தாய்வழி உறவுகளால் ஆதரவான சூழல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். சொத்து விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : ஆதாயமான நாள்.

அஸ்தம் : சுபிட்சமான நாள்.

சித்திரை : சாதகமான நாள்.

துலாம்

கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

சித்திரை : சாதகமான நாள்.

சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

விசாகம் : இலாபம் உண்டாகும்.

விருச்சகம்

புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எடுத்த காரியத்தில் இருந்த இடர்பாடுகள் விலகும். வியாபாரத்தில் தனவரவுகள் மேம்படும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : முன்னேற்றமான நாள்.

அனுஷம் : இடர்பாடுகள் விலகும்.

கேட்டை : பணவரவு மேம்படும்.

தனுசு

முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். மனை விருத்திக்கான புதிய திட்டங்களை உருவாக்குவீர்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். திறமைக்கேற்ப பணி உயர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம்

மூலம் : அங்கீகாரம் கிடைக்கும்.

பூராடம் : முன்னேற்றமான நாள்.

உத்திராடம் : பணி உயர்வு உண்டாகும்.

மகரம்

வெளியூர் பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இழுபறியான சூழல் அமையும். செய்யும் பணியில் பிறரின் விமர்சனங்களை பெரிதாக்க வேண்டாம். நிலுவையில் இருந்து வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

திருவோணம் : இழுபறியான சூழல் அமையும்.

அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.

கும்பம்

குடும்ப பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். மூத்த சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : சிக்கல்கள் நீங்கும்.

சதயம் : ஆதாயம் உண்டாகும்.

பூரட்டாதி : சாதகமான நாள்.

மீனம்

மறைமுக எதிரிகளை கண்டறிவீர்கள். விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : எதிர்ப்புகள் நீங்கும்.

உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.

ரேவதி : இடமாற்றம் உண்டாகும்.

Advertisements